நிலமும் நீரும் போல
அன்பில் அவனும் நானும்...
அவனோடு கொள்ளும் பொய்க்கோபம்
தரும் இன்பம்
அலாதியானது.
அதை விட இன்பம்
தேவருலகிலும் இருக்குமா?
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
(திருக்குறள்)
விளக்கம்:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback