பண்ணையாரின் தோற்றப்பொலிவை ஒரு முகம் தெரியாத புலவர் இப்படி வர்ணிக்கிறார்.
பண்ணையாருக்கு மாறு கண்.
அவர் வயிறு ஒரு பருத்தி மூட்டை போல் இருக்கும்.
அவர் தலை கீரை கடையும் மத்துப் போல் இருக்கும்.
அவருடைய பல்சுரைக்காய் விதை போல் இருக்கும்.
எப்போதும் சளிப் பிடித்திருப்பதன் காரணமாக அவர் நாசி வெளுத்துப் போயிருக்கும்.
வெட்டிப் பிளந்த மாங்கொட்டை போன்ற அவர் வாயில் ஈ மொய்க்கும்.
அவருடைய மீசையில் தாறுமாறாய் ஐந்தாறு முடி இருக்கும்.
களைத்துப்போன ஆட்டுக் கடா தலையைக் கவிழ்த்து நடக்கும் போது அதன் முக்கால் முகம் மட்டும் தெரியுமே அது போன்ற மொண்ணை முகம் அவருக்கு.
எங்கிருந்தோ கிழித்து ஒட்ட வைத்தது போல இருக்கும் முகத்துக்குப் பொருந்தாத அவருடைய ஏறுகாது.
இப்படிப்பட்ட தோற்றம் கொண்ட எங்கள் பண்ணையார் வந்தார்.
மாறு கண்ணும் பருத்திப்பைக்
கூறு வயிறும்-கீரை
மத்துப்போல் தலையும் சுரை
வித்துப்போல் பல்லும்
நீறுபோல் வெளுத்த வூளை
யூறு நாசியும்-தட்டி
நெரித்தமாங் கொட்டை போல்ஈ
அரித்த வாயும்
தாறுமாறாய் மீசையில் அஞ்
சாறு மயிரும்-தூங்கற்
சண்ணைக் கடாப் போல்நடையும்
மொண்ணை முகமும்
வேறு கீறி ஒட்டவைத்த
ஏறு காதுமாய்-நேமி
வீர னார்முக்கூடற்பண்ணைக்
காரனார்வந் தார்.
(முக்கூடற்பள்ளு 53)
Comments
Post a Comment
Your feedback