வளைந்த புருவம்,
கோவைப்பழம் போல் சிவந்த வாய்,
அந்த வாயில் குமிழி போல் தோன்றும் சிரிப்பு,
கங்கை தலையில் இருப்பதால் பனித்துளி படர்ந்த சடைமுடி,
பவளம் போல சிவந்த மேனி,
அந்த சிவந்த மேனியில் பால் போல வெண்மையான திருநீறு,
அழகிய பொற்பாதங்கள் என,
சிவபெருமானின் உருவத்தை என்னால் பார்த்து அந்த அழகில் திளைக்க முடிவதால் எனக்கு இந்த மனிதப் பிறவி வேண்டும்.
எனவே நான் பிறக்காத வரம் தர வேண்டும் என்றெல்லாம் கேட்க மாட்டேன் என்கிறார் திருநாவுக்கரசர் .
குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.
(தேவாரம்)
Comments
Post a Comment
Your feedback