ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதன் பயன் என்ன என்று தெரிந்து கொள்ளாமல், ஆசிரியரை உதாசீனப்படுத்தி விடும் மாணவனும் உண்டு.
அப்படி ஆசிரியரைக் கோபம் கொள்ள வைப்பவன் விபரம் தெரியாத மூடன் என்பதால், அந்த மூடனின் தாயை நினைத்து, பரிதாபப்பட்டு அமைதியாக இருந்துவிடுவது நிறை குணம் உள்ள ஆசிரியரின் இயல்பு.
பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
(நாலடியார் 316)
Comments
Post a Comment
Your feedback