தமிழ் மொழியில் ட் ,ண், ர், ல், ழ், ள், ற், ன் ஆகிய எட்டு மெய்யெழுத்துக்களையும் கொண்டு சொற்கள் தொடங்குவதில்லை. இந்த எட்டு மெய்யும் மொழிக்கு முதலில் வாராத எழுத்துக்கள்.
இவை ஏன் மொழிக்கு முதலில் வரவில்லை?
இந்த எட்டும் நாக்கு மேல் அண்ணத்தைத் தொடும்போது பிறக்கும் எழுத்துக்கள். மேல் அண்ணத்தைத் தொடும் எழுத்துக்கள் மிக நுட்பமானவை. மிகச் சரியாக உச்சரித்தால் மட்டுமே எந்த எழுத்தைச் சொல்கிறோம் என்று புரியும்.
ஒரு சொல்லைச் சொல்லத் துவங்கும்போது, புரிந்துகொள்ளவும் உச்சரிக்கவும் கடினமான எழுத்துக்கள் தமிழில் முதலாக வருவதில்லை.
தமிழ் மொழியில் அ, ஆ விலிருந்து எளிமையானது தான் முதலில் வரும்.
இதை ஆங்கிலத்தில்,
Easy things first என்பார்கள்.
Comments
Post a Comment
Your feedback