குழந்தையாக இருக்கும்போதே இடக் கையால் எதையாவது கொடுக்கும் போது பெற்றோர் கண்டிப்பதைப் பார்த்திருப்போம்.
"எதைக் கொடுத்தாலும் வலது கையால் தான் கொடுக்க வேண்டும். இடக்கையால் கொடுக்கக்கூடாது" என்று சொல்லிக் கொடுப்பார்கள்.
வலம்புரி விநாயகர், வலம்புரிச் சங்கு என்று நம் மரபு வலம் சார்ந்ததாக இருக்கிறது.
இந்துக்கள் மட்டும் அல்லாமல் ஐரோப்பாவில் கூட "இடக்கையால் கொடுக்கக்கூடாது" என்ற மரபு இருந்து கொண்டிருக்கிறது.
மரியாதை நிமித்தமாக கைகுலுக்கும் போது கூட வலக்கையை நீட்டித் தான் கைகுலுக்குகிறோம்.
இடது கையால் கைகுலுக்குவது அவமானப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அப்படி அவமானப்படுத்துவதை
Left-handed compliment என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
(My grandmother said I looked beautiful in torn jeans. I think she was playing me a Left- handed compliment.)
இடது கையால் கொடுப்பதும் அப்படித்தான் என்பதால் தான் குழந்தை முதலே வலது கையால் கொடுப்பதை வலியுறுத்துகிறார்கள்.
Comments
Post a Comment
Your feedback