ரேவதி சந்திரனோடு கூடியிருக்கும் நல்ல நாளில் சோழனுக்குப் பிறந்தநாள் வருகின்றது.
அவனை வாழ்த்தப் பரிசிலர்கள் வருகின்றனர்.
அந்தணர்கள் சோழனிடமிருந்து பசுவையும், பொன்னையும் பரிசாகப் பெற்றார்கள்.
புலவர்கள் மந்தரம் போன்ற யானைகைளைப் பரிசாகப்
பெற்றனர்.
மனிதர்கள் அனைவரும் பரிசு பெற்று மகிழ்ந்திருந்த அந்த நாள், மன்னனின் அரண்மனையில்
வாழும் சிலந்தி பூச்சிகளுக்கு மட்டும் துன்ப நாளாக அமைந்து விட்டது.
மன்னனின் பிறந்தநாளுக்காக அரண்மனைகள் ஒட்டடை அடிக்கக்ப்பட்டதால் தன் கூடுகளை
இழந்த நிலையை எண்ணி வருத்தம் கொண்டன.
அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறு
ஊர்ந்தார் – எந்தை
இலங்குவுல் கிள்ளி இரேவதி நாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு.
(முத்தொள்ளாயிரம்)
Comments
Post a Comment
Your feedback