நீங்கள் நீங்களாக இருக்கிறபோது நல்லவர்கள். அதே வேளையில் நீங்கள் நீங்களாக இல்லாதபோது கெட்டவர் அல்ல.
உங்களைக் கொடுக்க முயல்கின்ற போது நீங்கள் நல்லவர்கள். அதில் பயன் எதிர்பார்க்கிற போது நீங்கள் தீயவர் இல்லை.
ஏனெனில் அப்போது நீங்கள் மரத்தின் வேராக இருந்து பூமியில் வாய் பதித்து நிலத்தின் வளத்தை உறிஞ்சுகிறீர்கள்.
நிலத்தின் வளத்தை உறிஞ்சுவது வேரின் தேவை. பயன் நோக்காமல் பழம் தருவது மரத்தின் வேலை.
பழம் வேரைப் பார்த்து "என்னைப்போல பயனை எதிர்பார்க்காதே" என்று கூறுவதில்லை.
-கலீல் கிப்ரான்
Comments
Post a Comment
Your feedback