ஒரு காலத்தில் நல்ல நிலைமையில்
இருந்த மனிதர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதைப் பார்த்திருப்போம்.
அதேபோல இழிவான மனிதர்கள் ஒரு காலத்தில் போற்றப்படுவதும் உண்டு.
அது சமூகத்தின் இயல்பு.
மனிதர்களுக்கு மட்டும் தான் இப்படி என்றால் சில சொற்களுக்கும் கூட அப்படி ஒரு நிலை இருக்கிறது.
களிப்பு என்பது ஒரு காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட சொல். கள்ளுண்டு சுய நினைவு கூட இல்லாமல் ஆடிக் கொண்டிருப்பதைக் குறித்த சொல் அது. இன்றோ மகிழ்ச்சி என்ற உயர்வான பொருளைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டாடப்படுகிறது.
பூ வாசம், சந்தன நறுமணம் என்று உயர்வான பொருளைக் குறித்த 'நாற்றம்' என்ற அழகிய சொல் இன்று சாக்கடை போன்ற இழிவானதைக் குறிக்கும் சொல்லாக மாறிப் போய்விட்டது.
நல்லது இழிவாகவும் இழிவானது மேன்மையான ஒன்றாகவும் பார்க்கப்பட்டால் சமூகம் சீரழிந்து வருகிறது என்று அர்த்தம்.
சொற்களுக்கும் அது பொருந்தும் போல.
Comments
Post a Comment
Your feedback