தாமரைப் பூக்கள் பூத்து நிற்கும் பொய்கை அது.
அங்கே வருகிறாள் ஒரு பெண்.
தண்ணீருக்குள் இறங்கி தன் இரண்டு கைகளாலும் நீரை அள்ளி முகத்துக்கருகே கொண்டுவந்து பார்க்கிறாள்.
உள்ளே ஒரு கெண்டை மீன்.
கெண்டை கெண்டை எனக் குதூகலித்துக் கொண்டே கரைக்கு வருகிறாள்.
நீரை வடித்துவிட்டு கையை விரித்துப் பார்க்கிறாள். கெண்டை மீனைக் காணவில்லை. தப்பிப் போக வழியில்லையே, எப்படிப் போயிருக்கும் என்று ஒன்றும் புரியாமல் அப்படியே நிற்கிறாள்.
பாவம் அவளுக்குத் தெரியவில்லை.
இரண்டு கைகளாலும் நீரை அள்ளி முகத்துக்கருகே கொண்டுவந்து பார்த்த போது தெரிந்தது கெண்டை மீன் அல்ல, அவள் கண் தான் என்று.
தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகு ஏந்தினாள்;
கெண்டை கெண்டை எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.
(விவேக சிந்தாமணி)
Comments
Post a Comment
Your feedback