எப்போ அவன் வருவான் என்று வாசலையே பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்து ஓய்ந்து விட்டன.
அவன் புறப்பட்டுப் போனதிலிருந்து நாள் கணக்கைக் குறித்து வைத்து ,
குறித்து வைத்து என் விரல்களும் தேய்ந்து போய்விட்டன.
எப்போது தான் வருவானோ!
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(திருக்குறள்)
விளக்கம்:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback