நண்டே!
இந்த கடற்கரை வழியாகத்தான் அந்தத் தேர் போகும்.
அந்தத் தேரில் போவது என் காதலன்.
அவன் தேர் புறப்பட்டுப் போன பின்பு, தேர்போன தாரையைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அதில் ஒரு சிக்கல்.
நண்டே! இப்போதெல்லாம் நீ உன்னுடைய வளைந்த கால்களைக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து அந்த தேர் போன தடத்தை அழித்து விடுகிறாய்.
நான் எப்போதும் போல, தேர் போன அந்தத் தடத்தை கண்ணாரக் கண்டு மகிழவேண்டும்.
எனக்கு இருக்கும் ஒரே சந்தோசம் அது தான்.
அதனால் என் மனக் குறையைச் சொல்லி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்.
அந்தத் தடத்தை அழிக்காதே please.
கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன்
நெடுந் தேர் கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ!
(ஐந்திணை ஐம்பது)
Comments
Post a Comment
Your feedback