இந்தப் பிறவியில்
உன்னைப் பிரிந்து
இருக்க முடியாது என்றேன்.
கண்ணீரோடு அவள் கண்கள்,
அப்போ அடுத்த பிறவியில்?
என்ற கேள்வியோடு.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
(திருக்குறள்)
விளக்கம்:
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback