குருஷேத்திரப்
போர் நடக்கின்ற போர்க்களத்தில் கீதையை கண்ணன் உபதேசிக்கும் போது ஒரு பேயும் அதைக்
கேட்டதாம். அந்தப் பேய்க்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்ததாம்.
அதனால்
அறம் அறிந்தவர்கள் கண்டு சொன்ன செய்திகளை காதில் வாங்கினால் கூட நாம் எப்படி
இருந்தாலும் உயர்வான நிலைக்கு வரமுடியுமாம்.
எப்படியோ
இருந்த பேய்க்குக் கூட ஒரு நிலையில் கீதோபதேசம் காதில் விழுந்தது. ஆனால் இன்று
சமூகத்தில் அறம் பற்றிப் பேசினால் வேற்றுக்கிரக வாசி போலப் பார்க்கிற நிலை.
பள்ளியில்
கூட நீதிபோதனை வகுப்புகள் இல்லை.
அப்படியிருக்க
அறம் சொல்ல யார் இருக்கிறார்கள்?
அறம்
சொல்வதை யார் கேட்கிறார்கள்?
அன்று
அமரில் சொன்ன அற உரை வீழ் தீக்கழுது
மன்று உயர்ந்து போந்த வகை தேர்மின்-பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட வறம் பொருள் கேட்டல்லன்
மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு.
Comments
Post a Comment
Your feedback