அவள் அழகு என் கண்ணுக்கு விருந்து தான்.
ஆனால் அவள் கண்ணோ
எனக்கு எமன்.
ஒரே பார்வையில்
என் உயிரை உறிஞ்சிவிடும்.
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
(திருக்குறள்)
விளக்கம்:
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback