சண்டை போட்டுப்
பேசாமல் இருந்தேன் அவனோடு.
பொய்யாகத் தும்மினான்
நான் "நூறு வயது" என்று
வாழ்த்துவேன் என்று.
யார் கிட்ட!
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
(திருக்குறள்)
விளக்கம்:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback