மையிடுவதில்லை
நான் கண்ணுக்கு.
என் கண்ணுக்குள்
இருக்கிறான் அவன்.
மையெழுதினால்
மறைக்காதா அவனை?
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.(1127)
(திருக்குறள்)
விளக்கம்:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback