வனவாச காலத்தில் பாண்டவர்கள் கானகத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள். வனவாசம் முடிந்து பின்பு குருஷேத்ர யுத்தம் வருகிறது.
வனவாச காலத்தில் சுற்றித்திரிந்த நாட்களிலும் சரி குருஷேத்ர யுத்தத்திலும் சரி பாண்டவர்களுக்கு உதவியாக இருந்தவன் கண்ணன்.
அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக அமர்ந்து கீதை உபதேசம் செய்தவன்.
யுத்தத்தை வழிநடத்தும் போதே கீதோபதேசம் செய்து வாழ்க்கை நெறியைக் கூறி வழிநடத்திக் கொடுத்தவன்.
கவலைகள் நெஞ்சை வாட்டுகின்றபொழுது அவனே இதமாக ஆறுதலும் சொல்வான்.
பாரதி உணர்ந்த அந்தக் கண்ணன் பாடல் வடிவில்...
கானகத்தே
சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்; -- பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான்; -- என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்; -- நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில
இதஞ்சொல்லி மாற்றிடு வான்;
Comments
Post a Comment
Your feedback