என் கண்ணுக்குள்ளே
தான் இருக்கிறான்
அவன் எப்போதும்.
படக் படக் என
என் கண்கள்
இமைக்கும் போதும்
வலிக்காது அவனுக்கு.
அவ்வளவு நுட்பமானவன் அவன்.
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.
(திருக்குறள்)
விளக்கம்:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback