கானகத்தில் அலைந்து திரிந்த
பாண்டவர்கள் வாழும் வழி என்னவென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த காலமும்
இருந்தது.
பிழைப்பதற்கு வழி சொல்ல வேண்டும்
என்று கேட்டுக் கொண்டபோது இனிய மொழிகளால் வாழும் வழி சொன்னவன் கண்ணன்.
எப்படி உழைக்க வேண்டும்?
ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும்?
செய்த செயலுக்கு மட்டுமின்றி செய்ய இருக்கின்ற
செயல்களுக்கும் எப்படிப் பயன் கிடைக்கும்?
அந்தப் பயன் நமக்கு எப்படி வந்து சேரும்?
என்பதை எல்லாம் அறிவுரையாகக் கூறியவன் கண்ணன்.
கஷ்டமான நேரங்களில் அழைக்கும்
போதெல்லாம் சாக்குப் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வருகின்ற உண்மையான நண்பன்
அவன்.
மழை பெய்யும் போது அவன் குடை
ஆகிறான். பசி நேரத்தில் அவனே எமக்கு உணவாகிறான். அந்தக் கண்ணன் எங்கள் வாழ்வுக்கு
வழியும் ஒளியும் ஆகிறான்.
பாரதி உணர்ந்த அந்தக் கண்ணன் பாடல்
வடிவில்...
பிழைக்கும்
வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினிலே சொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழிவுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடைபசி நேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.
Comments
Post a Comment
Your feedback