கண்ணனை கடவுளாக
அல்லாமல் தோழனாகப் பாவித்த பாரதியின் அனுபவம் வார்த்தைகள் வழியே...
என் மனதில் கர்வம் தோன்றினால் சொல்லால் மட்டுமல்லாமல் செயலாலும்
ஓங்கி ஒரு அடி கொடுப்பான் கண்ணன். அதில் என் கர்வம் எல்லாம் காணாமல் போய்விடும்.
நெஞ்சுக்குள் வஞ்சனையான எண்ணத்தை வைத்துக்கொண்டு அவனோடு பேசினால்
காறி உமிழ்ந்திடுவான்.
கண்ணன் பேசத் தொடங்கினான் என்றால் என் மனசுக்குள் மண்டிக்
கிடக்கும் கவலையெல்லாம் மறைந்து போகும்.
எப்படி தெரியுமா?
பள்ளதுக்குள் தேங்கிக் கிடக்கும் அழுக்குத் தண்ணீரில்
பிடித்துக் கிடக்கும் பாசம் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போவது
போல ஒரு நொடியில் என் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.
ஓங்கி யடித் திடுவான்; -- நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
காறியுமிழ்ந்திடு வான்; -- சிறு
பள்ளத் திலேநெடு நாளழு குங் கெட்ட
பாசியை யெற்றிவிடும் -- பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்;
Comments
Post a Comment
Your feedback