என்னைப் பார்த்து
பின் தரையைப் பார்க்கிறாள்.
இப்படித் தான்
கண்ணால் என் காதல்
பயிருக்கு நீர்
ஊற்றிக் கொண்டு இருக்கிறாள்.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.(1093)
(திருக்குறள்)
விளக்கம்:
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback