பொதுவாகத் தான்
சொன்னேன் நான்.
யாரையும் விட
நம் காதல் உயர்ந்தது என்று.
யாரை விட ? யாரை விட?
எனக் கேட்டு என்னைப்
பிடித்துக்கொண்டாள்.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.(1314)
(திருக்குறள்)
விளக்கம்:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனா; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback