மாலை
நேரம் வந்து என்னை பாடாய்ப்படுத்துகிறது.
மாலை
மட்டுமா வருகிறது? மாலை வந்தாலே கூடவே இந்தப் புல்லாங்குழல் ஓசையும்
வந்துவிடுகிறது.
இந்த
நாட்டு மன்னன் இளவளவன் கூட இந்த மாலை நேரத்தை "வரக்கூடாது" என்று ஒரு
கட்டளை போட்டுத் தடுக்காமல் இருக்கிறான்.
என்னை
வதைக்கும் இந்த மாலை நேரத்தையே தடுக்காத மன்னன் மக்களை எப்படிப் பாதுகாப்பான்?
என்ன
மன்னனோ இவன்?
தெண்ணீர் நறுமலர்த்தார்ச்
சென்னி இளவளவன்
மண்ணகம் காவலனே
என்பரால் - மண்ணகம்
காவலனே ஆனக்கால்
காவானே - மாலைக்கண்
கோவலர்வாய் வைத்த குழல்
(முத்தொள்ளாயிரம்)
Comments
Post a Comment
Your feedback