தன்னுடைய நண்பனாகக் கண்ணனைப்
பாவித்துக் கொண்டு பாரதி கண்ட ஞான தரிசனம் பாடல்கள் வழியே நம் கண்களுக்கும்...
கண்ணா! எனக்கு இன்னது வேண்டும்
என்று கேட்டால் கேட்ட பொருளை உடனே கொடுப்பான்.
அவனைக் கேலி செய்தாலும் கூட
பொறுத்துக் கொள்வான்.
மனது வருந்தித் துவண்டு
இருக்கின்ற நாட்களில் ஆட்டங்கள் ஆடியும் பாட்டுக்கள் பாடியும் என் துயரங்கள்
போக்குவான்.
மனதுக்குள் நான் என்ன நினைத்துக்
கொண்டு இருக்கின்றேன் என்பதை நான் சொல்வதற்கு முன்பாகவே புரிந்து கொண்டு இருப்பான்
கண்ணன்.
எனக்கு கண்ணன் கிடைத்தது போல ஒரு
நண்பன் வேறு யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.
பாரதி உணர்ந்த அந்தக் கண்ணன் பாடல்
வடிவில்...
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத் திடுவான்; -- எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; -- என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லு முன்னுணர் வான்; -- அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?
Comments
Post a Comment
Your feedback