நினைத்தவுடன்
போய்விடுகிறது மனசு
அவனிடம் ...
போகத் தெரியாத
கண்கள் மட்டும்
கண்ணீர்க் கடலில்.
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
(திருக்குறள்)
விளக்கம்:
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback