நாகரிகம் வளர்வதற்கு முன்பிருந்தே விளையாட்டுக்கள் இருந்தன. மனிதன் ஒழுங்காக ஆடை அணியத் துவங்கும் முன்பே குத்துச் சண்டை இருந்திருக்கிறது.
கிரீஸ் நாட்டில் தான் குத்துச்சண்டை முதலில் தோன்றியதாக நம்பப்படுகிறது. கி.மு 500 க்கு முன்பிருந்தே குத்துச்சண்டை ஒரு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
சங்ககாலத்தில் புகார் நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும், அதில் கையால் ஒருவர்மீது ஒருவர் சினம் கொண்டு தாக்கிக் குத்திக்கொண்டு விளையாடியதையும் பற்றிய செய்திகள் பட்டினப்பாலையில் உள்ளன.
அது குத்துச் சண்டையா அல்லது குத்துச்சண்டை போன்ற வேறு விளையாட்டா என்பது பற்றித் தெளிவாகக் கூற முடியவில்லை.
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி,
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்,
என்பது அந்தப் பட்டினப்பாலை சொல்லும் செய்தி.
போருக்கு அஞ்சும் கோழைகள், வயது முதிர்ந்தவர்கள் , பெண்கள், குழந்தைகள், குழந்தை இல்லாதவர்கள் ஆகியோரை போரில் தாக்கும் வழக்கமில்லை.
குத்துச்சண்டையிலும் அப்படிப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. முறையற்ற வகையில் தாக்குவதும் இடுப்புக்குக் கீழே தாக்குவதும் கோழைத்தனமாகவும் குற்றமாகவும் கருதப்பட்டது.
இங்கிலீஷ் என்ற மொழி பிறப்பதற்கும், இயேசு கிறிஸ்து பிறப்புக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குத்துச்சண்டை ஒரு யுத்த விளையாட்டாக இருந்தது.
குத்துச்சண்டையின் தாக்கம் இல்லாத உலக நாடுகளோ மொழிகளோ கலைகளோ இல்லை.
சார்லி சாப்ளின், Mr. Bean முதல் நம் ஊர் வடிவேலு வரை குத்துச்சண்டை இல்லாத நகைச்சுவை இல்லை.
குத்துச் சண்டையில் இடுப்புக்குக் கீழே தாக்குவது என்பது முறையற்ற கேவலமான செயலாகக் கருதப்படுகிறது.
இப்படியே ஆங்கில மொழியில் இது ஒரு பயன்பாட்டு வழக்காகவும் இருக்கிறது.
Hit below the belt என்பதுதான் அது.
Hit below the belt என்றால் being very unsporting, being extremely cruel or unfair என்று அகராதியில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது விதிகளுக்குப் புறம்பான விளையாட்டு அல்லது நியாயமற்ற வகையில் விளையாடப்படுகின்ற கொடூரமான விளையாட்டு என்பது அதற்குப் பொருள்.
எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முறைகேடாக செயல்படுபவர்களைக் கூட Hit below the belt என்ற வழக்கால் குறிப்பிடுவார்கள்.
குத்துச்சண்டையில் இந்த அநாகரிகம் இருக்கிறதோ இல்லையோ தெரியாது.
ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா தேர்தல்களிலும் Hit below the belt தான் வெற்றிக்கான சூத்திரம்.
Comments
Post a Comment
Your feedback