அங்கே இருக்கும்போதும்
உன்னை நினைத்துக்
கொண்டிருந்தேன் என்றேன்.
அப்போ அதுவரைக்கும்
மறந்திருந்திருக்கத் தானே
நினைக்க முடிந்தது
என்று கோபப்பட்டாள்.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
(திருக்குறள்)
விளக்கம்:
நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று ஊடினாள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback