கண்ணனை கடவுளாக
அல்லாமல் தோழனாகப் பாவித்த பாரதியின் அனுபவம் வார்த்தைகள் வழியே..
கண்ணன் என் நண்பன்.
கோபம் தலைக்கேறி முகம் சிவக்க நிற்கும்போது ஏதோவொன்றைச் சொல்லி குலுங்கிச்
சிரிக்கச் செய்திடுவான்;
ஏதோவொரு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ஏதோ சொல்லி
மனம் தளிர்க்கச் செய்திடுவான்;
பெரும் ஆபத்து நேரிடும் போது பக்கத்தில் நின்று அதனை விலக்கிடுவான்;
நமக்கு ஏற்படும் தீமைகளையெல்லாம் விளக்கில் விழும் பூச்சிகளைப் போல
விழுந்து அழிந்திடச் செய்திடுவான்.
கோபத்தி லேயொரு
சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடு வான்; -- மனஸ்
தாபத்தி லேயொன்று செய்து மகிழ்ச்சி்
தளர்த்திடச் செய்திடுவான்; -- பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடுவான்; -- சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்
தீமைகள் கொன்றிடு வான்;
Comments
Post a Comment
Your feedback