அறிவேயில்லை
இந்தக் கண்களுக்கு...
அவனைப் பார்க்கும் போது
யோசிக்காமல் ஓடிப்போனதும்
என்னைக் காதலில்
தள்ளி விட்டதும் போதாதென்று
அவன் இல்லாத போது
அழுது கொண்டும்...
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.
(திருக்குறள்)
விளக்கம்:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback