அழகிய குளத்தின் நடுவில் ஒரு மலர் மலர்ந்து நிற்கிறது.
அது குவளை மலர்.
அதில் வண்டுகள் ரீங்காரம் கேட்கிறது.
அதைப் பார்க்கும் போது ஒற்றைக் காலில் குளத்தின் நடுவில் தவம் செய்வது போல் இருக்கிறது.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த
அவள் வீட்டுக்கு வருகிறாள்.
அப்போது கூர்மையான
வேலோடு பாண்டிய மன்னன் குதிரையில் போகிறான். அவன் மார்பில் குவளை மலர் மாலை அவனைத்
தழுவிக் கொண்டிருக்கிறது.
ஓ... இத்தனை
தவமும் இதற்குத் தானா.
அவனைத்
தழுவும் ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.
அப்புறம்
என்ன ...?
அவளும்
ஒற்றைக் கால் தானா இனி!
கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்
வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டு இருக்கப் பெற்ற குணம்.
(முத்தொள்ளாயிரம்)
Comments
Post a Comment
Your feedback