போருக்குச் சென்றுவிட்டு போர் முடிந்தவுடன்
வீட்டுக்கு வந்த வீரன் தன் மனைவியிடம் கூறுகிறான்.
உன்னைப் போலவே
அங்கே மயில் ஆடுவதைப் பார்த்தேன்.
உன் நெற்றியைப்
போலவே முல்லை மணப்பதை உணர்ந்தேன்.
நீ பார்ப்பதைப்
போலவே மான்கள் பார்த்ததைக் கண்டேன்.
உன் நினைவு வந்தது.
வந்துவிட்டேன்.
உன் அழகிய நெற்றியைக்
காண
கார் மேகத்தைக்
காட்டிலும் விரைவாக வந்துவிட்டேன்.
நின்னே போலும்
மஞ்ஞை ஆலநின்
நன்னுதல் நாறும்
முல்லை மலர
நின்னே போல
மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி
வந்தனென்
நன்னுதல் அரிவை
காரினும் விரைந்தே.
|
(ஐங்குறுநூறு
492) |
Comments
Post a Comment
Your feedback