எப்போது நமக்கு வசதி வரும்?
எப்போது திடீரென்று ஏழையாகவோம்?
தொடர்ந்து கடின உழைப்பும் விடா முயற்சியும் இருப்பவர்கள் இன்றோ நாளையோ உன்னதமான நிலைக்கு வருவார்கள்.
நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு எப்போது அழிவு ஆரம்பம்?
தற்போது வசதி வாய்ப்பும், செல்வ வளமையும் உள்ளவர்கள் இனி கூடிய சீக்கிரம் செல்வத்தையெல்லாம் இழக்கப் போகிறார்கள் என்பதற்கு மூன்று அறிகுறிகள் இருக்குமாம்.
அறிகுறி 1:
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டும் தற்பெருமை பேசிக் கொண்டும் இருப்பது.
அறிகுறி 2:
முன்பு மாதிரி இல்லாமல் எதற்கெடுத்தாலும் கோபம் அதிகமாக வருவது.
அறிகுறி 3:
நமக்கு உண்மையில் தேவை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் கண்ணில் கண்ட பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஆசை வருவது.
இந்த மூன்று அறிகுறிகளும் ஒருவருக்குத் தோன்றினால் கூடிய விரைவில் எல்லாச் செல்வத்தையும் அவர் இழக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும்-முன்னிய
பல் பொருள் வெஃகும் சிறுமையும், இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை.
(திரிகடுகம்)
Comments
Post a Comment
Your feedback