நீ வேறு நான் வேறா
என்றார் அன்று.
அவர் பாட்டுக்கு அங்கே
நான் பாட்டுக்கு இங்கே
இப்படியாக இன்று.
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
(திருக்குறள்)
விளக்கம்:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback