நான் பார்க்கும்போது அவள்
வெட்கத்தில்
தரையைப் பார்க்கிறாள்.
நான் எங்கோ பார்க்கும்போது
என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கிறாள்.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
(திருக்குறள்)
விளக்கம்:
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback