என்னை நினைக்கலாம்
என்று நினைத்து
நினைக்காமல் விட்டிருப்பானோ?
வருவதுபோல் வந்து
வராமல் போய்விட்டது
என் தும்மல்.
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
(திருக்குறள்)
விளக்கம்:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback