ஒரு நாள் என்பது
ஏழு நாள் போலத் தான்.
வெளியூர் சென்றவன்
எப்போது வருவான்
எனக் காத்திருக்கும்
என் போன்ற பெண்ணுக்கு.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.(1269)
(திருக்குறள்)
விளக்கம்:
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல (நெடிதாக) கழியும்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback