நன்றாகப் பார்ப்பதற்குள் கடந்து சென்று விடும் எதையும் "மின்னல் போல" என்று சொல்லுவார்கள்.
சைக்கிள் நன்றாக வேலை செய்ய அடிக்கடி chain உள்ளிட்ட பாகங்களுக்கு எண்ணெய் அல்லது கிரீஸ் விட்டுப் பராமரிப்பார்கள். அதாவது அப்படி எண்ணெய் அல்லது கிரீஸ் விடும் போது அந்த சைக்கிள் முன்பை விட வேகமாகப் போகும்.
இப்போது தான் பார்த்த மாதிரி இருந்தது. அதுக்குள்ளே ஆளையே காணோம் என்று சிலரைச் சொல்வார்கள். அப்போது "கண்ணு மாயம் விட்ட மாதிரி காணாமல் போய்விட்டான்" என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
இந்தக் கண்ணு மாயம் விட்டது போல் காணாமல் போவதை ஆங்கிலத்தில் greased lightning என்பார்கள்.
மின்னலே கண்ணில் பார்க்க முடியாத வேகம். அப்படியிருக்க மின்னலுக்கு எண்ணெய் தடவி விட்டது போல என்பது "என்னா வேகம்" என்ற திகைப்பைக் காட்ட வந்த மரபுத் தொடர்.
"வாம்மா மின்னல்" என்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி greased lightning என்பதற்கு செய்முறை விளக்கம் போல இருப்பதைப் பார்த்திருப்போம்.
When he saw his father, he ran out the door like greased lightning.
என்பது பயன்பாட்டுக்கான ஒரு உதாரணம்.
greased lightning என்று ஒரு ஆல்பம் song கூட இருக்கிறது.
Well, this car is automatic, it's systematic, it's hydromatic
Why it's Greased Lightning!
We'll get some overhead lifters and four barrel quads, oh yeah
இது அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள்.
Comments
Post a Comment
Your feedback