சூடாக நான்
எதையும் குடிப்பதில்லை.
என் நெஞ்சுக்குள்
இருக்கும் அவனைச்
சுட்டுவிடும் என்று.
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
(திருக்குறள்)
விளக்கம்:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback