அக்டோபர் 25, 1811
பரிதாபத்துக்குரிய கணித மேதை என்று நினைவு கொள்ளப்படும் கணித மேதை எவாரிஸ்ட் கலாய்ஸ் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் இன்று பிறந்தார்.
அவர் ஏன் பரிதாபத்துக்குரியவர் என்று கருதப்படுகிறார்?
அவரைப் பற்றிய சில விபரங்கள் இந்த லிங்க்-கில்
அக்டோபர் 25 : 1881
ஓவியம் என்றாலே பிக்காஸோ என்று நினைவுக்கு வரும் வகையில் சாதனை புரிந்த ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) பிறந்த நாள்.
இருபரிமாண (Two Dimension) ஓவியங்கள் மட்டுமே ஓவியம் என்று நினைத்துக்கொண்டிருந்த காலத்தில் அதை மாற்றியவர்கள் இரண்டு பேர். மைக்கேல் ஏஞ்செலாவும், லியொனார்டோ டாவின்சியும் தான் அவர்கள். அவர்கள் தான் முப்பரிணாம ஓவியங்களை ஓவியத்துறைக்கு அறிமுகப்படுத்தினர்.
அவர்கள் மறைந்த பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் தர முடியவில்லை.
அதன் பின் பிக்காஸோ 'கியூபிசம்' (cubism) என்ற புதிய ஓவிய பாணியை அறிமுகப்படுத்தினார். அதனால் தான் அவர் 'நவீன ஓவியங்களின் பிரம்மா' என்ற புகழைப் பெற்றார் .
அக்டோபர் 25 : 1936
பெர்லின் வானொலியில் முதன் முதலாக ‘நேயர் விருப்பம்' நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்டோபர் 25 : 1951
நாடு சுதந்திரம் அடைந்த பின் சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவை பொதுத் தேர்தல் 25.10.1951 முதல் 21.2.1952 வரை பல கட்டங்களாக நாடு முழுவதும் 489 தொகுதிகளில் நடைபெற்றது.

Comments
Post a Comment
Your feedback