அக்டோபர் 31 : 1875
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்.
அக்டோபர் 31 : 1902
பசிபிக் பெருங்கடலின் குறுக்காக முதல் தந்திக் கம்பி அமைக்கப்பட்டது.
அக்டோபர் 31 : 1931
தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ சென்னையில் திரையிடப்பட்டது. இதே படம் தெலுங்கிலும் முதல் பேசும் படமாகும். ஏனெனில் படத்தின் கதாநாயகி பேசுவது பாடுவதெல்லாம் தமிழில் கதாநாயகனோ தெலுங்கில் பேசிப் பாடுவான்.
அக்டோபர் 31 : 1962
இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால் பலத்த கண்டனத்திற்குள்ளான பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கே. மேனன் பதவி விலகினார்.
அக்டோபர் 31 : 1984
இந்திரா காந்தி தன் மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இளம் வயது இந்தியப் பிரதமராக இந்திராவின் மகன் ராஜிவ் 40 வயதில் பதவியேற்றார்.
அக்டோபர் 31 : 1986
தமிழ்நாடு மேல் சபை ஒழிக்கப்பட்டது.
அக்டோபர் 31 : 1990
புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல். வசந்தகுமாரி காலமானார்.
அக்டோபர் 31 : 1992
‘பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது’ என்று வலியுறுத்தியதால் சர்ச் நிர்வாகம் கலிலியோவை வீட்டுச் சிறையில் அடைத்தது. சிறையில் கண்பார்வையை இழந்த அவர் 1642 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவர் இறந்து 350 ஆண்டுகள் கழித்து போப் இரண்டாம் ஜான்பால் இன்று (31.10.1992) ‘பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது’ என்பதை ஏற்றுக்கொண்டார்.
அக்டோபர் 31 : 2003
செம்மங்குடி என்று வெறும் ஊர்பெயரைச் சொன்னாலே இவர் தான் என்று எல்லோருக்கும் தெரியும் வகையில் பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான் செம்மங்குடி சீனிவாச ஐயர் மறைந்த நாள்.
25 ஜூலை 1908 - அன்று பிறந்து தன்னுடைய வயது தொண்ணூறு கடந்த போதும் இசைமேடைகளை அலங்கரித்த மேதை அவர்.
அக்டோபர் 31 : 2005
பிரபலமான தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி பி. லீலா மறைந்த நாள்.
உத்தம புத்திரன் படத்தில் இவர் பாடிய காத்திருப்பான் கமலக்கண்ணன் ... என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்ற பாடலாக விளங்கியது.
அக்டோபர் 31 : 2018
உலகத்தின் மிக உயர்ந்த சிலை என்ற பெருமையுடன் சர்தார் படேல் சிலை அவருடைய பிறந்த நாளான இன்று (The Statue of Unity) குஜராத் மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback