அக்டோபர் 28 : 1627
ஜஹாங்கீர் ஆக்ரா திரும்பும் வழியில் லாகூர் அருகே கோமா நிலையை அடைந்து மரணமடைந்தார்.
அக்டோபர் 28 : 1636
அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகமாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஜான் ஹார்வார்டில் முயற்சியால் அமைக்கப்பட்டது.
அக்டோபர் 28 : 1831
மைக்கேல் பாரடே டைனமோ வேலை செய்வதை செயல் விளக்கம் செய்து காட்டினார்.
அக்டோபர் 28 , 1867
சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடரான சகோதரி நிவேதிதா பிறந்த நாள்.
இவர் ஒரு ஆங்கில-ஐரிஷ் பெண். மார்கரெட் எலிசபெத் நோபல் என்பது இவரின் இயற்பெயர். விவேகானந்தரின் போதனைகளால் தன்னை அவரது சீடராக்கிக் கொள்ளவிரும்பி 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியாவுக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே கல்கத்தா துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சை கொடுக்கும்போது விவேகானந்தர் அவருக்கு நிவேதிதா என்ற பெயரைச் சூட்டினார். நிவேதிதா என்றால் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு என்பது பொருள்.
ஒரு மேற்கத்தியப் பெண் ஒரு இந்து சமயத் துறவியிடம் சந்நியாசம் பெற்றது அப்போதைய காலத்தில் அதுவரை கேள்விப்பட்டிராத ஒன்றாக பரபரப்பாகப் பேசப்பட்டது.
அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் இவர் மறைந்தார்.
அக்டோபர் 28, 1900
மாக்ஸ் முல்லர் மறைந்த தினம்.
டிசம்பர் 6, 1823 அன்று பிறந்தவர். ஜெர்மானிய இலக்கியவாதியான இவர் இந்திய இலக்கியங்களின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதார புருஷர் என்ற கருத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் இவர் . இவர் எழுதிய "ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்" (Ramakrishna: His Life and Sayings) என்ற புத்தகம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி ஒரு வெளிநாட்டினரால் எழுதப்பட்ட புத்தகங்களுள் முதலாவதாகும்.
சுவாமி விவேகானந்தர் இவரைப் பற்றி தன்னுடைய நூலில் உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார். பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவரை சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கடிதம் எழுதியவர் மாக்ஸ் முல்லர்.
அக்டோபர் 28 : 1924
பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திரச் சிலையை தேசிய சின்னம் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.
அக்டோபர் 28, 1955
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பிறந்த நாள்.


Comments
Post a Comment
Your feedback