அக்டோபர் 6: 1536
பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இங்கிலீஷ் புரொட்டஸ்டண்ட் சீர்திருத்தவாதி வில்லியம் டிண்டேல் சூனியக்காரர் என்று குற்றம் சாட்டப்பட்டு, உயிரோடு கொளுத்தப்பட்டார். இவரது பைபிள்தான் பின்னாளில் கிங்ஜேம்ஸ் பைபிள் என்னும் அதிகாரபூர்வமான பைபிளுக்கு மூலநூலானது.
அக்டோபர் 6: 1799
பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் விதரிங் பர்மிங் ஹாமில் காலமானார். பேரியம் கார்பனேட் இவரது பெயரால் விதரைட் என்று குறிப்பிடப்படுகிறது.
அக்டோபர் 6: 1860
இந்தியன் பீனல் கோடு சட்டமாக்கப்பட்டது. இது 1862 ஜனவரி முதல் தேதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 6: 1935
கவிஞர், பாடலாசிரியர் புலமைப்பித்தன் பிறந்த நாள்.
அக்டோபர் 6: 1974
முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.கே.மேனன் டில்லியில் காலமானார்.
அக்டோபர் 6: 1983
ரஷ்ய விண்கலத்தில் விண்வெளி செல்ல இந்திய வீரர் ராகேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்டோபர் 6: 2010
Instagram (இன்ஸ்டாகிராம்) இன்று தான் தொடங்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback