அக்டோபர் 24 : 1605
அக்பரின் மகன் சலிம், ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் டில்லி அரியணையில் அமர்ந்தான்.
அக்டோபர் 24 : 1801
வெள்ளை மருது, சின்ன மருது, செவத்த தம்பி, அவன் மகன் முத்துச்சாமி, முத்துக்கருப்புத் தேவர் மற்றும் பல புரட்சியாளர்கள் திருப்பத்தூர் பழையகோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
அக்டோபர் 24 : 1863
பங்கு பத்திரங்களை மாற்றிக் கொடுக்கப் பயன்படும் தபால்தலை இந்தியாவில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. சுங்கத் துறைக்கான தபால் தலையும் இன்றே வெளியிடப்பட்டது.
அக்டோபர் 24 : 1909
லண்டன் இந்திய ஹவுசில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இந்திய தூதுக்குழுத் தலைவராக வந்த காந்தி அதில் கலந்து கொண்டார்.
அக்டோபர் 24 : 1914
நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் லட்சுமி பிறந்த நாள்.
அக்டோபர் 24 :1940
இந்திய விண்வெளித்துறையின் தலைவராக இருந்த கி.கஸ்தூரிரங்கன் பிறந்த நாள்.
பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 24 : 1941
இந்தியாவில் இன்று தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைக்கப்பட்டது.
அக்டோபர் 24 : 1953
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் காலமானார்.



Comments
Post a Comment
Your feedback