அக்டோபர் 4 : 1752
பிரிட்டிஷ் டொமினியன் முழுவதும் கிரிகொரியன் காலண்டர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இதனால் அக்டோபர் 4ஆம் தேதிக்குப் பிறகு அக்டோபர் 15 ஆம் தேதியே அடுத்த நாளாகக் கணக்கிடப்பட்டது.
அக்டோபர் 4 : 1851
இந்தியாவின் முதல் தந்தி அலுவலகம் கல்கத்தாவிற்கும் டயமண்ட் துறைமுகத்துக்குமிடையே இயங்க ஆரம்பித்தது.
அக்டோபர் 4: 1884
சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்.
அக்டோபர் 4: 1904
திருப்பூர் குமரன் பிறந்த நாள்.
அக்டோபர் 4 : 1926
லண்டனில் எம்பயர் சினிமா ஹாலில் முதல் பேசும்படம் திரையிடப்பட்டது.
அக்டோபர் 4 : 1947
குவாண்டம் தியரியை உருவாக்கிய ஜெர்மனி இயற்பியல் அறிஞர் மாக்ஸ் பிளாங்க் ஜெர்மனியில் காலமானார். 1918ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
அக்டோபர் 4 : 1952
முதன் முதலில் பேஸ்மேக்கர் கருவி டாக்டர் பால்சோல் என்பவரால் பயன்படுத்தப்பட்டு டேவிட் ஹ்வார்ட்ஸ் என்பவரின் இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது.
அக்டோபர் 4 : 1957
உலகின் முதல் செயற்கைக் கோள் ஸ்புட்னிக்-1 ரஷ்யாவால் ஏவப்பட்டது.
அக்டோபர் 4 : 1977
ஐ.நா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வாஜ்பாய் முதன் முதலாக இந்தியில் பேசினார்.
அக்டோபர் 4 : 1991
தமிழகத்தில் மேல்சபை ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்டோபர் 4 : 1998
திறனாய்வாளரும் சொற்பொழிவாளருமான சாலை இளந்திரையன் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback