அக்டோபர் 7, 1920
கவிஞர் முடியரசன் பிறந்த நாள். துரைராசு என்பது தான் இவர் பெயர். முடியரசன் இவரது புனைபெயர்.
பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனால் 'என் மூத்த வழித்தோன்றல்' என்று பாராட்டப்பெற்றவர்.
1998 டிசம்பர் 3, இவர் மறைந்த நாள்.
அக்டோபர் 7, 1938
கவிஞர் ஞானக்கூத்தன் பிறந்த நாள்.
“திருமந்திரம்” தன்னை ஈர்த்ததால் அரங்கநாதன் என்ற தனது பெயரை ஞானக்கூத்தன் என்று மாற்றிக்கொண்டவர் இவர். தாய்மொழி கன்னடம் என்ற போதும் இவரது தமிழ்ப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
2016 ஜூலை 27 இவர் மறைந்த நாள்.
7 அக்டோபர் 1950
தெரசா அம்மையார் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆப் சாரிடி அமைப்பைத் தொடங்கினார்.
7 அக்டோபர்1952
சண்டிகர் இன்று பஞ்சாப்பின் தலைநகரம் ஆனது.
Comments
Post a Comment
Your feedback