அக்டோபர் 12 : 1492
கொலம்பஸ் சான்சால்வடாரில் காலடி வைத்த நாள். அமெரிக்காவில் இந்த நாள் கொலம்பஸ் தினமாக பெரும்பாலான மாநிலங்களால் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 12 : 1785
சென்னையிலிருந்து மெட்ராஸ் கூரியா என்னும் செய்தி ஏடு வெளிவந்தது.
அக்டோபர் 12 : 1849
பிரிட்டனில் சேஃப்டி பின் தயாரிப்பதற்கான காப்புரிமை சார்லஸ் ரௌலி என்பவருக்கு வழங்கப்பட்டது.
அக்டோபர் 12: 1891
ச. வையாபுரிப் பிள்ளை பிறந்த நாள்.
இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில்
ஒருவர் இவர் . ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல பரிமாணங்களைக்
கொண்டவர்.
அக்டோபர் 12 : 1901
அமெரிக்க ஜனாதிபதி தியொடர் ரூஸ்வெல்ட் “எக்ஸிக்யூட்டிவ் மாளிகை” என்னும் பெயரை ‘வெள்ளை மாளிகை’ என மாற்றினார்.
அக்டோபர் 12:
1912
நெ. து. சுந்தரவடிவேலு பிறந்த நாள்.
காமராஜர் முதலமைச்சராக
இருந்த போது பொதுக் கல்வி இயக்குனராக இருந்தவர். இவர் ஆலோசனைப் படி தான் காமராஜர் மதிய
உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். இவர் காலத்தில் தான் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்விக்கு
பெரும் முக்கியத்துவம் தரப்பட்டது.
அக்டோபர் 12 : 1932
சென்னை திருவல்லிக்கேணி தொகுதி மாநகராட்சி மன்ற உறுப்பினராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்டோபர் 12 : 1943
முதன்முதலாக சென்னையின் மீது ஜப்பானிய விமானத் தாக்குதல் நடந்தது.
அக்டோபர் 12 : 1967
சோஷலிஸ்ட் கட்சித் தலைவரும் புகழ் பெற்ற பாராளுமன்ற உறுப்பினருமான ராம் மனோகர் லோகியா காலமானார்.

Comments
Post a Comment
Your feedback