அக்டோபர் 18 : 1799
பாரிசில் ஜென்சி ஜெனீவ் கார்னெரின் என்னும் பெண் முதன் முதலாக பலூனில் உயரே சென்று பாராசூட் மூலம் கீழே குதித்தார்.
அக்டோபர் 18 : 1842
நியூயார்க் துறைமுகத்தில் சாம்யூல் மோர்சினால் கடலடியில் தந்திக் கம்பிகள் முதன் முதலில் அமைக்கப்பட்டன.
அக்டோபர் 18 : 1851
பிரிட்டனில் முதன் முதலாக கடல் கடந்த நாடுகளுடன் தந்தித்; தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
அக்டோபர் 18 : 1928
முதன் முதலாக கலர் திரைப்படம் பிரிட்டனில் ராயல் போட்டோ கிராபிக் சொஸைட்டியில் திரையிட்டுக் காட்டப்பட்டது.
அக்டோபர் 18 : 1931
தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் காலமானார்.
அக்டோபர் 18 : 1955
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எமிலியோ செக்ரி என்பவரால் எதிர் புரோட்டான் (anti proton ) என்னும் அணு நுண்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அக்டோபர் 18 : 2004
தமிழ்நாடு கர்நாடக இரண்டு மாநில காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த தலைமறைவுக் கொள்ளையன் சந்தனக்கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்.
184 கொலைகள், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தன மரக்கடத்தல் , பல யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடியது என பல குற்றங்களைச் செய்த போதும் அவனது புத்திக்கூர்மைக்காக காவல்துறை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியவன் வீரப்பன்.
அவனைச் சுட்டுக் கொன்ற போது அதிரடிப் படையின் தலைவராக இருந்த விஜயகுமார் அவனைப் பற்றி VEERAPPAN- CHASING THE BRIGAND என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

Comments
Post a Comment
Your feedback