அக்டோபர் 10 : 1801
தொண்டைமானின் படைகளுக்கும் ஊமைத்துரை, முத்து வெள்ளை நாயக்கர் படைகளுக்கும் திண்டுக்கல்லில் நடந்த மோதலில் தொண்டைமான் படை தோல்வியடைந்தது.
அக்டோபர் 10 : 1857
சிப்பாய்க் கலகம் என்று குறிப்பிடப்படும் முதல் விடுதலைப் போரில் கர்னல் எட்வர்ட் கிரேட் ஹெட்ழன் படை ஆக்ராவில் புரட்சியாளர் படையை முறியடித்தது.
அக்டோபர் 10 : 1896
ராஜஸ்தான்-ஜோத்பூரில் வானியல் ஆய்வு மையம் துவங்கப்பட்டது.
அக்டோபர் 10:
1906
உலக அளவில் புகழ் பெற்ற
ஆங்கில எழுத்தாளரும் இந்திய நாவல் ஆசிரியருமான
ஆர்.கே.நாராயணன் பிறந்த நாள்.
ஆர். கே. நாராயணன் என்பது ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் என்பதன் சுருக்கம்.
தன்னுடைய நாவல்களுக்காக இவர் உருவாக்கிய மால்குடி என்ற ஒரு கற்பனை கிராமம் உலகம் முழுவதும் புகழ்பெற்று ஒரு புது வரலாறு படைத்தது.
அந்தப் பெருமை என்றும் நிலைத்திருக்கும் வகையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மால்குடி எக்ஸ்பிரஸ் என இந்திய ரயில்வே பெயர் வைத்துள்ளது.
16024 MALGUDI EXPRESS, YELHANKA JN (YNK) To MYSURU JN (MYS)
பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.
அக்டோபர் 10, 1908
கொடுமுடி கே.பி.சுந்தராம்பாள் பிறந்த நாள்.
தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் பெற்றவர்.
1937ல் காந்தி ஈரோடு பகுதியில் சுற்றுப்பயணம் செய்த போது கொடுமுடியில் உள்ள கே.பி.சுந்தராம்பாள் வீட்டில் உணவருந்தினார். அப்போது, காந்திக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பரிமாறினார் கே.பி.எஸ். சாப்பிட்ட பிறகு காந்தி கேட்டுக்கொண்டதால் விருந்து முடிந்ததும் அந்தத் தங்கத் தட்டையும் அவருக்கே கொடுத்துவிட்டார். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.
1953-ஆம் ஆண்டு வெளிவந்த அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு ரூ. 1 லட்சம் சம்பளமாகத் தந்தார். அப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 58 ரூபாய். அந்தக் காலத்தில் எந்த நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத சம்பளம் இது.
1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் செப்டம்பர் 19 அன்று சுந்தராம்பாள் மறைந்தார். அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.
“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவும் அரசு மரியாதையுடன் தகனம் செய்யவும் அவர் உறவினர்கள் அனுமதிக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர். அரசு மரியாதையும் வழங்கப்பட்டது.
சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடல் இன்றும் காற்றில் கலந்து அவர் நினைவைச் சுமந்துவருகிறது.
அக்டோபர் 10 : 1969
மகாத்மா காந்தியும் அன்னை கஸ்தூரிபாயும் சேர்ந்தபடியான தபால்தலை வெளியிடப்பட்டது. தம்பதியர் இடம் பெறும் முதல் தபால்தலை இதுவே.
அக்டோபர் 10 : 1972
எம்.ஜி.ராமச்சந்திரன் தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டார்.
அக்டோபர் 10 : 1977
தமிழறிஞர் மு. வரதராஜனார் காலமானார்.
அக்டோபர் 10 : 1991
இன்று நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
அக்டோபர் 10 : 2015
நகைச்சுவை நடிகை 'ஆச்சி' மனோரமா மறைந்த நாள்.
1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததோடு அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆகிய தமிழக முதலமைச்சர்களுடனும் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவுடனும் நடித்த பெருமைக்குரியவர் இவர்.
அக்டோபர் 10 : 2022
தமிழக வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback