அக்டோபர் 11 : 1737
கல்கத்தா நிலநடுக்கத்தால் 3 லட்சம் மக்கள் மடிந்தனர்.
அக்டோபர் 11 : 1803
இரண்டாவது பிரிட்டிஷ் மராத்தா போரில் இந்தியாவின் படை பிரிட்டிஷாரிடம் சரணடைந்தது.
அக்டோபர் 11:
1826
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள்.
இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில்
வெளியான முதல் புதினம் ஆகும்.
அக்டோபர் 11:
1902
ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாள்.
அக்டோபர் 11 : 1911
பாரதியார் நூல்களைப் பறிமுதல் செய்ய சென்னை அரசால் ஆணை வெளியிடப்பட்டது.
அக்டோபர் 11 : 1919
விமானப் பயணத்தின் போது உணவு பரிமாறும் முறை முதன் முதலாக லண்டன் - பாரிஸ் பயணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்டோபர் 11 : 1932
தொலைக்காட்சி மூலம் அரசியல் கட்சி பிரச்சாரம் செய்யும் முறை நியூயார்க்கில் துவங்கப்பட்டது.
அக்டோபர் 11 : 1976
பம்பாயிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானம் எரிந்து விழுந்தது. அதில் பயணம் செய்த பழைய காங்கிரஸ் தலைவர் பொன்னப்ப நாடார், நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் பலியானார்கள்.
அக்டோபர் 11 : 2011
சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைந்த தினம்.
கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ‘டூயட்’ எனும் திரைப்படத்தில் உள்ள எல்லாப் பாடல்களிலும் சாக்சபோன் இசை வருவதைக் கேட்டிருப்போம். அது கத்ரிகோபால்நாத்தின் சாக்சபோன் இசை.

Comments
Post a Comment
Your feedback